/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ₹18,662 கோடி செலவு; ஒப்புதல் கொடுத்த மத்திய அரசு | Cabinet meeting | Numaligarh - Gopur
₹18,662 கோடி செலவு; ஒப்புதல் கொடுத்த மத்திய அரசு | Cabinet meeting | Numaligarh - Gopur
பிரதமர் மோடி தலைமையில் நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில், நுமாலிகர் - கோபூர் இடையிலான பசுமை வயல் சாலை இணைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாட்டிலேயே முதல் முறையாக நீருக்கு அடியில் சாலை மற்றும் ரயில் சுரங்க வழிப்பாதை அமைக்கும் திட்டம் இது தான். அசாமின் பிரம்மபுத்ரா நதிக்கு அடியில் சுரங்கம் தோண்டி 18,662 கோடி செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமின் நுமாலிகர் - கோபூர் இடையே செல்ல காசிரங்கா தேசிய பூங்கா, பிஸ்வநாத் நகரத்தை கடக்க வேண்டும். 240 கி.மீ., தொலைவு கொண்ட இந்த துாரத்தை கடக்க ஆறு மணி நேரம் ஆகும்.
பிப் 15, 2026