உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பிரதமர் உட்பட அனைத்து எம்பிக்கள் பங்கேற்கும் சிறப்பு கூட்டம் | Special meeting | Parliament central

பிரதமர் உட்பட அனைத்து எம்பிக்கள் பங்கேற்கும் சிறப்பு கூட்டம் | Special meeting | Parliament central

பழைய பார்லிமென்டில் கூடும் இரு சபைகளின் சிறப்பு கூட்டம் காரணம் இதுதான்! நமது அரசியலமைப்பு சட்டம், 1949 நவம்பர் 26ல் வரலாற்று சிறப்பு மிக்க பார்லிமென்ட் மைய மண்டபத்தில் கூடிய அரசிலமைப்பு நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின் 1950 ஜனவரி 26ல் அமலுக்கு வந்த நிலையில் 75 ஆண்டுகளை எட்டியுள்ளது. இதை கொண்டாடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக குளிர்கால கூட்டத்தொடர் துவங்கி, 2வது நாளான நவம்பர் 26ல் பார்லிமென்டில் சிறப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. பழைய பார்லிமென்ட் கட்டடத்தின் மைய மண்டபத்தில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்வுகளின்போது மட்டுமே கூட்டு கூட்டம் நடத்தப்படும். அதிலும், இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளின்போது சிறப்பு கூட்டமாக நடத்தப்படும். இதில், பிரதமர் உட்பட லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்களும் பங்கேற்க உள்ளனர்.

நவ 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி