உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஓபிஎஸ் உடன் இருந்தவர்கள் திமுகவுக்கு செல்வதை தடுக்க பழனிசாமி வியூகம்! OPS | EPS | ADMK |Vaithilingam

ஓபிஎஸ் உடன் இருந்தவர்கள் திமுகவுக்கு செல்வதை தடுக்க பழனிசாமி வியூகம்! OPS | EPS | ADMK |Vaithilingam

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் உள்ளிட்டோருடன் தனி அணியாக செயல்பட்டு வந்தார். இதில் மனோஜ் பாண்டியன், கடந்த வாரம் தி.மு.க.வில் இணைந்தார். அதற்கு முன்னதாகமுன்னாள் எம்.பி.க்கள் அன்வர் ராஜா, டாக்டர் மைத்ரேயன், மருது அழகுராஜ் போன்றவர்கள், தி.மு.க.வில் இணைந்து விட்டனர். அதேபோல் ஓபிஎஸ் அணியில் இருந்து வைத்திலிங்கமும் வெளியேற முடிவு செய்துள்ளார். அவர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர விரும்புகிறார்.

நவ 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை