/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பஹல்காம் தாக்குதலில் கண்முன் கணவரை இழந்த குஜராத் பெண் ஆவேசம் | Pahalgam attack
பஹல்காம் தாக்குதலில் கண்முன் கணவரை இழந்த குஜராத் பெண் ஆவேசம் | Pahalgam attack
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், 22ம் தேதி பயங்கராவதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். குடும்பத்தோடு சுற்றுலா சென்றவர்களில் ஹிந்துக்களை மட்டும் குறிவைத்து தாக்கினர். முஸ்லிம் என்றவர்களை தொழுகைக்கான நமாஸ் ஓத வைத்து, உண்மையில் அவர் முஸ்லிம் தானா என்பதை உறுதி செய்தனர். பின் முஸ்லிம் அல்லாத ஆண்களை சுட்டுக் கொன்றனர். இதில், குஜராத்தின் சூரத் நகரை சேர்ந்த சைலேஷ் கலாத்தி என்பவர் மனைவி, குழந்தைகளின் கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்டார். பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியது குறித்தும், அவர்கள் நடத்திய கொடூர தாக்குதல் குறித்தும் சைலேஷின் மனைவி, மகன் விளக்கினர்.
ஏப் 25, 2025