/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பாகிஸ்தானில் இருந்து வந்த இந்துக்களை வெளியேற்ற சுப்ரீம் கோர்ட் தடை | Pakistani Hindu Refugees
பாகிஸ்தானில் இருந்து வந்த இந்துக்களை வெளியேற்ற சுப்ரீம் கோர்ட் தடை | Pakistani Hindu Refugees
டெல்லியின் யமுனை நதிக்கரை பகுதியில் உள்ள மஜ்னு கா டில்லா என்ற இடத்தில், பாகிஸ்தானிலிருந்து வந்த இந்து அகதிகள் பல ஆண்டுகளாக தற்காலிக குடியிருப்பு அமைத்து வசித்து வருகின்றனர். சுமார் 250 குடும்பங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மக்கள் அங்கே உள்ளனர். அந்த பகுதி சூழலியல் ரீதியாக முக்கியமானது என்பதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனடிப்படையில், டெல்லி மேம்பாட்டு ஆணையம் அந்த குடியிருப்புகளை இடிக்கத் திட்டமிட்டு, கடந்த காலங்களில் பலமுறை நோட்டீஸ் அனுப்பியது.
பிப் 03, 2026