உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஓபிஎஸ் தீவிர எதிர்ப்பாளர்களுக்கு இபிஎஸ் சர்பிரைஸ் | Palanisamy | ADMK | District secretaries post |

ஓபிஎஸ் தீவிர எதிர்ப்பாளர்களுக்கு இபிஎஸ் சர்பிரைஸ் | Palanisamy | ADMK | District secretaries post |

ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு ஷாக் இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், அதிமுக ஓட்டு சதவீதம் 2021 சட்டசபை தேர்தலில் பெற்றதை விட குறைந்து விட்டது. இதனால் கட்சியை கட்டமைக்கும் வகையில், மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டச் செயலர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. கட்சியில் இப்போது 82 மாவட்ட செயலர்கள் உள்ளனர். மகளிர் அணி, இளைஞர் அணி என, 17 அணிகளுக்கு மாநில செயலர்கள் உள்ளனர். 2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலர் என கூடுதலாக, 15க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் உருவாக்கும் பணிகள் முடிந்துள்ளன. ஒட்டுமொத்தமாக அதிமுகவில் அமைப்பு ரீதியாக, 100 மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த வார இறுதிக்குள் புதிய மாவட்ட செயலர்கள் பட்டியலை வெளியிட, அக்கட்சி பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். சசிகலா, பன்னீர்செல்வத்தை தீவிரமாக எதிர்ப்பவர்களுக்கு இப்பட்டியலில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

ஆக 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !