உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பல்லடத்தில் இந்து கடவுள்களை இழிவு செய்த பகீர் | palladam hindu issue | tirupur hindu religion issue

பல்லடத்தில் இந்து கடவுள்களை இழிவு செய்த பகீர் | palladam hindu issue | tirupur hindu religion issue

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த புத்தக கண்காட்சியில் திராவிடர் தளம் என்ற பெயரில் ஸ்டால் போடப்பட்டு இருந்தது. அங்கு இந்து கடவுள்களையும் இந்து கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக நோட்டீஸ் விநியோகித்தனர். இதை அறிந்த இந்து பரிவார் கூட்டமைப்பு, இந்து மக்கள் கட்சி, இந்து பாரத் சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் புத்தக கண்காட்சி நடக்கும் இடத்தை முற்றுகையிட்டனர். அந்த ஸ்டாலை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று கோஷம் போட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

டிச 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை