அடுத்து என்ன நடக்க போகிறது ஒடிசாவில்? | Pandian IAS | BJP
பாண்டியனுக்காக 450 ஹெலிபாட்கள்? ஆட்டத்தை ஆரம்பித்து வைக்கும் பாஜ ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் உதவியாளராக இருந்தவர் தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பாண்டியன். இவர் முழு நேர அரசியலில் ஈடுபட முடிவு செய்ததை அடுத்து அரசுப்பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அதன்பின் பிஜு ஜனதா தள கட்சியில் இணைந்து நவீன் பட்நாயக்கிற்கு அடுத்த இடத்தில் இருந்து கட்சியை வழிநடத்தினார். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டார். இந்த தேர்தலில் பிஜு ஜனதா தளம் படுதோல்வி அடைந்ததை அடுத்து அரசியலில் இருந்து பாண்டியன் ஒதுங்கினார்.
ஆக 14, 2024