ரவுடி நாகேந்திரனுக்கும் பால் கனகராஜுக்கும் என்ன தொடர்பு? | BSP Armstrong | BJP RC Paul Kanagaraj
ஆம்ஸ்ட்ராங் வழக்கு பால் கனகராஜிடம் விசாரணை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், இதுவரை 23 பேர் கைதாகி உள்ளனர். திமுக, அதிமுக, பாஜ, தமாகா, காங்கிரஸ் என பல கட்சிகளை சேர்ந்தவர்கள், வக்கீல்கள், ரவுடிகள் என பலதரப்பட்டவர்கள் அடுத்தடுத்து சிக்கி வருவதால் அரசியல் வட்டாரத்தில் இந்த வழக்கு பரபரப்பாக பேசப்படுகிறது. கொலைக்கான காரணம் குறித்து ஒவ்வொருவராக போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த பரபரப்புக்கு நடுவே, இந்த வழக்கில் விசாரணைக்கு வரும்படி பாஜ மாநில துணைத்தலைவர் பால் கனகராஜுக்கு தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்பேரில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் பின்புறமுள்ள தனிப்படை அலுவலகத்தில், காலை 11 மணி அளவில் பால்கனகராஜ் ஆஜரானார்.