சனாதனத்தை பாதுகாக்க ஒவ்வொரு இந்துவும் பாடுபட வேண்டும் Pawan kalian alleges | hindus are targeted
ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் அளித்த பேட்டி: தமிழகத்தின் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நீதிபதி ஒருவர், இந்துக்களின் உரிமைகளை பாதுகாக்கும் தீர்ப்பு வழங்கினார். அவரை பதவியில் இருந்து நீக்க கோரும் தீர்மானத்தை பார்லிமென்ட்டில் கொண்டுவர 100க்கு மேற்பட்ட எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தந்த போது, இந்துக்கள் சட்டரீதியாகத்தான் போராடினார்கள். நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சொல்லவில்லை. அரசியலமைப்பு சட்டம் அனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்கியுள்ளது. முஸ்லிம், கிறிஸ்தவர்களின் நலன்களை பாதுகாக்கும் விதிகள் இந்து மதத்துக்கும் பொருந்தும்.