/ தினமலர் டிவி
/ அரசியல்
/ காரைக்குடியில் வீடு, டீக்கடை மீது குண்டு வீச்சு | Petrol Bomb Attack |Tea Shop Attack | Tamil Nadu
காரைக்குடியில் வீடு, டீக்கடை மீது குண்டு வீச்சு | Petrol Bomb Attack |Tea Shop Attack | Tamil Nadu
காரைக்குடி சேர்வார் ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் சந்தானகுமார், வயது 50. டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சந்தானகுமார் நடத்தி வரும் டீக்கடைக்கு வந்த அவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த சந்தானகுமாரின் தாயார் அவர்களை திட்டி அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், நேற்று இரவு சந்தானகுமாரின் வீடு மற்றும் டீக்கடை மீது இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசியது.
ஜூன் 08, 2026