மோடியை வாழ்த்தி ஸ்டாலின், விஜய் சொன்னது Modi birthday | Modi birthday today | Stalin | TVK Vijay
நாட்டுக்கு கேப்டனே நீங்க தான் மோடி மீது ஊற்றும் வாழ்த்து மழை டிஸ்க்: பிரதமர் மோடி 74 வயதை நிறைவு செய்து இன்று 75வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு உள்ளூர் தலைவர்கள் முதல் உலக தலைவர்கள் வரை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மோடியை அசாத்தியமான தலைவர் என்று ஜனாதிபதி முர்மு புகழ்ந்தார். நாட்டின் வளர்ச்சியும், மதிப்பும் தங்களால் உயர்ந்தது. இந்தியாவை விரைவில் வளர்ந்த நாடாக்க தாங்கள் எடுக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் என்று முர்மு கூறினார். மோடிக்கு வாழ்த்து தெரிவித்த உள் துறை அமைச்சர் அமித்ஷா, மோடியின் மன உறுதி வலுவானது. பொதுநலன் மிகுந்த தலைவரான மோடி ஏழைகள் வாழ்வில் ஒளியேற்ற பல திட்டங்களை கொண்டு வந்தவர். மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியவர் என்று கூறினார். இந்தியா மீதான உலக கண்ணோட்டத்தை மாற்றியவர் மோடி. கடலுக்கு அடியில் கிடந்த நாட்டின் கவுரவத்தை விண் உச்சிக்கு கொண்டு சென்றவரும் மோடி தான் என்றும் புகழ்ந்தார். பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆரோக்கியமான உடல் நலனும், நீண்ட ஆயுள் பெறவும் பிரார்த்திக்கிறேன் என்றார். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். பாஜ தலைவர்கள் மோடியை இந்தியாவின் கேப்டன் என்று புகழ்ந்து சோசியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தனது பிறந்த நாளான இன்று ஒடிசாவின் புவனேஸ்வரில் நடக்கும் நிகழ்ச்சியில் மோடி பங்கேற்கிறார். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 26 லட்சம் வீடுகளை இன்று துவங்கி வைக்கிறார். ஒடிசா மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றுகிறார்.