ஐ.நா.சபையில் பிரதமர் மோடி சூளுரை! PM Modi | 79th UN General Assembly | New York
மனிதகுலத்தின் வெற்றி போர்க்களத்தில் இல்லை! ஐக்கிய நாடுகள் சபையின் 79வது பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். மனித குல வரலாற்றில் நடந்த மிகப்பெரிய தேர்தலில், 3வது முறையாக சேவை செய்ய இந்திய மக்கள் வாய்ப்பு வழங்கினர். உலக மக்கள் தொகையில் 6ல் ஒரு பங்கு மக்களின் குரலை இங்கு எதிரொலிக்க வந்துள்ளேன். இந்தியாவில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து அகற்றியதுடன், நிலையான வளர்ச்சி சாத்தியம் என்பதை உணர்த்தி உள்ளோம். மனிதகுலத்தின் வெற்றி கூட்டு பலத்தில் தான் உள்ளது. போர்க்களத்தில் அல்ல. உலகளாவிய அமைதி மற்றும் வளர்ச்சிக்கு, சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் முக்கியம். உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக தொடர்கிறது. மறுபுறம், சைபர் பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆகியன புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன.