லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்களை தெறிக்கவிட்ட மோடி | PM Modi Congress | AAP | Bjp | lok sabha
மோடி கேள்வி கேட்ட அந்த ஒரு நிமிடம்... எம்பிக்கள் கப்சிப் பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பல்வேறு கட்சி எம்பிக்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். லோக்சபா எதிர்கட்சித் தலைவர் ராகுல், ஜனாதிபதி உரையையும், மத்திய அரசின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தார். அப்போது, எஸ்சி, எஸ்டிக்கள் நலனில் மத்திய பாஜ அரசு அக்கறை செலுத்தவில்லை என்றார். விவாதத்தின் நிறைவாக பிரதமர் மோடியின் பதில் உரை இடம் பெற்றது. அதில் அரசின் சாதனைகளை விளக்கியதுடன் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கும் மோடி பதில் அளித்தார். நாட்டு மக்கள் முன் ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன். இது பற்றி மக்கள் நிச்சயம் சிந்திப்பார்கள், விவாதிக்கவும் செய்வார்கள்.