மோடி அமெரிக்கா செல்வது இதற்கு தான்-பரபரப்பு தகவல் | PM Modi America visit | QUAD Summit | UN Summit
அதிபர் தேர்தல் பரபரப்புக்கு நடுவே அமெரிக்கா பறக்கும் பிரதமர் மோடி 3 நாள் விசிட்டின் பின்னணி என்ன? அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பிரசாரம் களை கட்டி இருக்கிறது. நவம்பர் 5ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடிரயரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இந்த பரபரப்பான சூழலில் 3 நாள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். செப்டம்பர் 21, 22, 23 ஆகிய தேதிகளில் அவர் அமெரிக்காவில் இருப்பார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடக்கும் குவாட் மாநாட்டில் மோடி பங்கேற்று பேசுகிறார். 22ம் தேதி நியூயார்க்கில் நடக்கும் நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினர் முன்பு உரையாற்றுகிறார். அதே போல் ஐக்கிய நாடுகள் பொது சபையில் எதிர்காலத்துக்கான மாநாடு என்ற தலைப்பில் நடக்கும் கூட்டத்தில் மோடி உரையாற்ற உள்ளார். மோடியின் அமெரிக்க பயணத்தை இந்திய வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது. குவாட் மாநாடு, ஐநா பொது சபை மாநாடுகளில் பங்கேற்க 3 நாள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். இந்திய வம்சாவளியினர், பிரபல நிறுவனங்களில் சிஇஓக்களிடமும் பேச உள்ளார். குவாட் மாநாட்டுக்கு வரும் மற்ற நாடுகளின் பிரதிநிதிகளிடமும் தனித்தனியாக பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்புள்ளது என்று வெளியுறவுத்துறை கூறியது. அமெரிக்கா நடத்தும் குவாட் மாநாட்டை இந்த முறை இந்தியா தான் நடத்த வேண்டும். ஆனால் அமெரிக்க அதிபர் பைடனின் கோரிக்கையை ஏற்று இந்தியா அடுத்த ஆண்டு நடத்த ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.