உலக தலைவர்களை அசத்திய மோடியின் மேஜிக் | PM Modi Gifts Laos
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் அமைப்பில் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா, வியட்நாம், லாவோஸ், கம்போடியா, புருனே ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. கிழக்கு ஆசியா அமைப்பில் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான் உட்பட 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த 2 அமைப்புகளின் உச்சி மாநாடுகள் சமீபத்தில் லாவோஸ் நாட்டின் தலைநகர் வியன்டியேனில் நடந்தது. மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி லாவோஸ், தாய்லாந்து, நியூசிலாந்து, ஜப்பான் நாடுகளின் தலைவர்களுக்கு இந்திய நாட்டின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பொருட்களை பரிசளித்தார்.
அக் 13, 2024