/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மத்திய தகவல் ஆணைய உத்தரவுக்கு தடை | PM Modi | Degree details | Delhi high court
மத்திய தகவல் ஆணைய உத்தரவுக்கு தடை | PM Modi | Degree details | Delhi high court
பிரதமர் மோடியின் பிஏ, எம்ஏ பட்டப் படிப்பு சான்றிதழ் குறித்து ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் 2016ல் கேள்வி எழுப்பினார். அப்போது பாஜ தேசிய தலைவராக இருந்த அமித் ஷா, மோடியின் பிஏ, எம்ஏ பட்டப்படிப்பு சான்றிதழ்களை செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இதற்கிடையே ஆம் ஆத்மி நிர்வாகியும் ஆர்வலருமான நீரஜ் சர்மா, ஆர்டிஐ மூலம் பிரதமர் மோடி பிஏ முடித்த 1978ல் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களின் விவரங்களையும் ஆய்வு செய்ய அனுமதி கேட்டு டில்லி பல்கலையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டது.
ஆக 25, 2025