உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயக்கம் ஏன்? | PMK | Ramadoss | Dmk | Caste wise census

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயக்கம் ஏன்? | PMK | Ramadoss | Dmk | Caste wise census

பாமக வலியுறுத்தணுமா அப்போ திமுக அரசு எதுக்கு? பாமக நிறுவனர் ராமதாசின் அறிக்கை: பாஜ கூட்டணியில் இருக்கும் பாமக அக்கட்சிக்கு அழுத்தம் கொடுத்து சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த சொல்லலாம் என அமைச்சர் ரகுபதி கூறியிருந்தார். இது, சமூகநீதியை காப்பதில் திமுக அரசின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தேசிய மற்றும் மாநில அளவிலும் நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாமகவின் நிலைப்பாடு. தமிழகத்தில் சமூகநீதியை காக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. அதற்காக மத்திய அரசை பாமக வலியுறுத்த வேண்டும் என்றால் தமிழகத்தில் திமுக ஏன் ஆட்சியில் இருக்க வேண்டும்? லோக்சபாவில் திமுக அணிக்கு 39 எம்.பிகள் எதற்கு ? அவர்களும் பதவி விலகி விடலாமே? சமூக நீதியைக் காக்க வேண்டியதும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியதும் தமிழக அரசின் கடமை. அதை நிறைவேற்ற சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது, நீதிமன்றங்களும் உறுதி செய்துள்ளன.

ஜூலை 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ