மோதலால் எதிர்காலம் கேள்விக்குறி பாமக நிர்வாகிகள் கவலை | Pmk| ramadoss | anbumani
பாமகவில் அப்பா - மகன் இடையே வெடித்த மோதல், ஓராண்டை கடந்தும் முடிவுக்கு வரவில்லை.
வரும் சட்டசபை தேர்தலில், இரு தரப்பும் வெவ்வேறு கூட்டணியில் இடம் பெறுவதோடு, இரு தரப்பு வேட்பாளர்களும் பல தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுவதும் உறுதியாகி உள்ளது.
அன்புமணியின் அக்கா ஸ்ரீ காந்தி, பென்னாகரம் அல்லது தர்மபுரி தொகுதியில் களமிறங்க முடிவு செய்துள்ளார்.
இந்த தொகுதிகளில் ஒன்றில், அன்புமணி அல்லது அவரது மனைவி சவுமியா போட்டியிடுவர் என, பாமகவினர் கூறுகின்றனர். இதனால், ராமதாஸ் குடும்பத்தினரே தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகும்.
பென்னாகரத்தில் ஸ்ரீ காந்தி அல்லது அவரது மகன் சுகந்தன் போட்டியிட்டால், அத்தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் ஜி.கே.மணி, மேட்டூர் தொகுதியில் போட்டியிடுவார்.