குவைத்தில் இந்திய தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய மோடி! Modi at Kuwait | Modi meets Indian labourers
என் குடும்பத்தில் 140 கோடி பேர்! தமிழில் வணக்கம் சொன்ன மோடி தொழிலாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி! அரசுமுறை பயணமாக குவைத் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களை சந்தித்து பேசினார். துாத்துக்குடியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் மோடியிடம் பேச துவங்கியதும், மோடி அவரிடம் தமிழில் வணக்கம் எனக் கூறியதும், தொழிலாளர்கள் அனைவரும் இன்ப அதிர்ச்சியில் மூழ்கினர். நான் குவைத் வந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. என் தாய், தந்தை, மனைவி, குழந்தை துாத்துக்குடியில் உள்ளனர். நான் அடிக்கடி என் குடும்பத்தாரிடம் வீடியோ காலில் பேசுவேன். துாத்துக்குடியில் அரசு நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து இங்கிருந்தபடியே அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.