உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கிராம மக்களிடம் பணம் கேட்ட திமுக நிர்வாகி: குமரியில் பரபரப்பு | karungal | kanniyakumari

கிராம மக்களிடம் பணம் கேட்ட திமுக நிர்வாகி: குமரியில் பரபரப்பு | karungal | kanniyakumari

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பிசிலி குளம் உள்ளது. ஒரு காலத்தில் இந்த குளம் கருங்கல் கிராம மக்களுக்கு பெரும் பயனை தந்து வந்தது. விவசாயம் செய்யவும், குளிக்கவும் துணி துவைக்கவும் பிசிலி குளத்தை கருங்கல் மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக குளத்தை தூர் வாரி பராமரிக்கவில்லை. இதனால் மழை காலங்களில் போதிய அளவு நீரை குளத்தில் சேமிக்க முடியாத நிலை இருந்தது. விவசாயத்துக்கு நீர் இன்றி கருங்கல் விவசாயிகள் சிரமத்தை சந்தித்தனர். இதனால் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று ஊர் மக்களே தூர் வாரும் பணியை துவங்கி முழுவீச்சில் செய்து வந்தனர். கிள்ளியூர் திமுக ஒன்றிய நிர்வாகி தனது ஆதரவாளர்களுடன் குளக்கரைக்கு காரில் வந்தார். குளத்தை தூர் வார வேண்டும் என்றால் எனக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுங்கள் என கேட்டதாக கூறப்படுகிறது.

மார் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை