/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விசைத்தறி உரிமையாளர்களை அழைத்து பேச்சு நடத்திய கலெக்டர் Powerloom Strike | Covai | Tiruppur
விசைத்தறி உரிமையாளர்களை அழைத்து பேச்சு நடத்திய கலெக்டர் Powerloom Strike | Covai | Tiruppur
கூலி உயர்வு கேட்டும், மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் 7 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை கலெக்டர் பவன்குமார் இன்று விசைத்தறி உரிமையாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். தங்களது கோரிக்கைகள் குறித்து விசைத்தறியாளர்கள் கலெக்டரிடம் விளக்கினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்துள்ளார். இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் லட்சக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். 200 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மார் 25, 2025