உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இனி பயங்கரவாதிகள் வெளுக்கப்படுவார்கள்: வருது புது நடைமுறை | prahaar policy | Anti-terror policy

இனி பயங்கரவாதிகள் வெளுக்கப்படுவார்கள்: வருது புது நடைமுறை | prahaar policy | Anti-terror policy

பயங்கரவாதி எங்கிருந்தாலும் டுமீல்! காஷ்மீர் முதல் குமரி வரை ஒரே Order மத்திய அரசின் அதிரடி மாறிவரும் காலத்திற்கேற்ப நவீன பயங்கரவாத அச்சுறுத்தல்களை முறியடிக்க பிரஹார் என்ற பெயரில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு கொள்கையை மத்திய அரசு வகுத்துள்ளது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்வதே இந்த புதிய கொள்கையின் முக்கிய நோக்கமாகும். எல்லை தாண்டிய பயங்கரவாதம், சைபர் அச்சுறுத்தல்கள், ட்ரோன் தாக்குதல்கள் உட்பட பயங்கரவாதத்தின் அடுத்தடுத்த பரிணாமங்களை ஒழிப்பதை இது இலக்காக கொண்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒரே மாதிரியான நடைமுறையைகொண்டு வர இது வழிவகை செய்கிறது. சோஷியல் மீடியா மூலம் வெறுப்புப் பேச்சுகளைப் பரப்புவது, உள்கட்டமைப்புகளை முடக்குவது போன்ற நவீன சைபர் அச்சுறுத்தல்களைக் கண்காணிக்கவும் தடுக்கவும் புதிய நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்திற்குப் பணம் அனுப்புதல், வெளிநாட்டு நிதி மூலம் மதமாற்றம் மற்றும் தீவிரவாதக் கருத்துகளைப் பரப்புதல் ஆகியவற்றைத் தடுக்க, நிதிப் பரிவர்த்தனைகள் மீது கடுமையான கண்காணிப்பு இருக்கும். தாக்குதல் நடந்த பிறகு எதிர்வினையாற்றுவதை விட, தாக்குதல் நடக்கும் முன்பே அதைத் தடுக்கும் அணுகுமுறையை இந்த கொள்கை வலியுறுத்துகிறது. இதற்காக, உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் கூடுதல் வேகம் மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்படும். இந்தியாவுக்கு எதிராக அண்டை நாடுகளிலிருந்து தூண்டப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்க, சர்வதேச அளவில் ராஜதந்திர ரீதியாக அழுத்தம் கொடுப்பதற்கான வழிமுறைகள் இதில் இடம்பெற்றுள்ளன. தீவிரவாதக் குழுக்கள் இப்போது சமூக ஊடகங்கள் மற்றும் டார்க் வெப் போன்ற தளங்களை அதிகம் பயன்படுத்துகின்றன. இவற்றை எதிர்கொள்ள சாதாரண சட்டங்கள் போதாது. வெறுப்பு பிரசாரங்கள் மூலம் சமூகத்தில் பிளவை உண்டாக்கி, அதன் மூலம் வன்முறையைத் தூண்டும் முயற்சிகளை முறியடிப்பது தேசிய பாதுகாப்பிற்கு மிக அவசியமாகிறது. இதையெல்லாம் ஆரம்பகட்டத்திலேயே தடுக்க அனைத்துப் பாதுகாப்பு அமைப்புகளும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு அதிகரிக்கும் போது சதித் திட்டங்களை முளையிலேயே கிள்ளுவதும் சாத்தியமாகும். முன்னர் ஒவ்வொரு மாநிலமும் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வெவ்வேறு நடைமுறைகளைப் பின்பற்றி வந்தன. தற்போது பிரஹார் கொள்கை மூலம், ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே மாதிரியான பாதுகாப்பு உத்தி பின்பற்றப்படும். இது பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போரில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. சர்வதேச அளவில் இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு வலுவான கட்டமைப்பாக அமைய உள்ளது.

பிப் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ