உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பல்கலை உள் புகார் குழுவின் விசாரணையும் நடப்பதாக பதிவாளர் தகவல் | Prakash | Anna university

பல்கலை உள் புகார் குழுவின் விசாரணையும் நடப்பதாக பதிவாளர் தகவல் | Prakash | Anna university

சென்னை அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், ராஜா அண்ணாமலைபுரம் அனைத்து மகளிர் போலீசில் செவ்வாயன்று இரவு புகார் ஒன்றை அளித்துள்ளார். தனது ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தின் பின்புறம் பேசிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள், நண்பரை தாக்கிவிட்டு தன்னை பாலியல் சீண்டலுக்கு முயன்றதாக அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் உரிய வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக உள் புகார் குழுவின் விசாரணையும் நடப்பதாக பல்கலை பதிவாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

டிச 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை