2026 தேர்தல் வெற்றிக்கு வியூகம் வகுக்கும் தவெக தலைவர் விஜய் | Prashant Kishor | Actor Vijay | TVK
2026 சட்டசபை தேர்தலில் விஜய் விருப்பம் இதுதான் போட்டுடைத்த பிரஷாந்த் கிஷோர் நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி 2ல் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். 2026 சட்டசபை தேர்தலை இலக்காக கொண்டு கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் விஜயுடன் கைகோர்த்துள்ளார். சில தினங்களுக்கு முன் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்திய பிரசாந்த் கிஷோர், மாமல்லபுரத்தில் நடந்த த.வெ.க 2ம் ஆண்டு விழாவிலும் பங்கேற்றார். 35 ஆண்டு கால அரசியலில் விஜய் புதிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளார். விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழகம் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் பேசி இருந்தார். இந்நிலையில் 2026 சட்டசபை தேர்தலில் விஜய் தனித்து நின்று ஆட்சியை பிடிப்பார் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். 2026- சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க அதிமுக விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க தவெக விரும்பவில்லை. 2026 தேர்தலை தனித்து சந்திக்க கட்சி தலைவர் விஜய் வியூகம் வகுத்து வருகிறார். விஜய் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். விஜய் தனித்து போட்டியிடப் போவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்து இருப்பது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.