உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சாதுக்கள் முதல் சாமானியன் வரை புனித நீராடும் திரிவேணி சங்கமம் Prayagraj Maha Kumbh| Kumbhamela| Modi

சாதுக்கள் முதல் சாமானியன் வரை புனித நீராடும் திரிவேணி சங்கமம் Prayagraj Maha Kumbh| Kumbhamela| Modi

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணிசங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகாகும்பமேளா வரும் ஜனவரி 13ல் துவங்கி பிப்ரவரி 26 வரை நடைபெற உள்ளது. கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இங்கு, வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் புனித நீராட வருவார்கள். லட்சக்கணக்கானோர் கும்பமேளாவுக்கு வருவார்கள் என்பதால், அவர்களுக்கு தேவையான வசதிகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்துள்ளன. இன்று பிரயாக்ராஜுக்கு சென்ற பிரதமர் மோடி, திரிவேணி சங்கமத்தில் பால் ஊற்றியும், மலர் துாவியும் வழிபட்டார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்தி பென் படேல் உடன் இருந்தனர். அங்கு நடந்த நிகழ்ச்சியில், மகாகும்பமேளாவுக்காக பிரத்யேகமாக கட்டப்பட்ட குடில்கள், மேம்பாலங்கள், நிதிக்கரையை ஒட்டிய புதிய சாலைகள், பக்தர்களுக்கு தேவையான உள்கட்டமைப்புகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

டிச 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி