அப்போ இந்திரா இப்போ ராகுல்; காங்கிரஸ் DNA இதுதான்: சவுகான்
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாக கண்டித்து, பார்லிமென்ட் வளாகத்தில் எதிர்கட்சிகள் எம்பிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்றும் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது. பதாகைகளை ஏந்தியபடி, அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்; பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது, வயநாடு எம்பி பிரியங்கா பேட்டி கொடுத்தார். அம்பேத்கர் பற்றிய பாஜவின் உணர்வுகள் வெளிவந்துவிட்டன. இந்த விவகாரத்தை நாங்கள் எழுப்பியதால் எதிர்கட்சிகள் மீது அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. தேசிய நலனும் இதில் தொடர்புடையது. அம்பேத்கரை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது. ஆதானி பற்றி எந்த விவாதமும் நடத்த மத்திய அரசு பயப்படுகிறது. விரக்தியில் ராகுல் மீது மத்திய அரசு பொய்யான எப்ஐஆர் பதிவு செய்கிறது. நான் அவருடைய தங்கை. எனக்கு தெரியும். ராகுல் யாரையும் தள்ளிவிடவில்லை. அவர் அப்படி செய்திருக்கவே மாட்டார். இந்த நாடும் இதை அறியும். விரக்தியில் இருக்கும் மத்திய அரசு, திசை திருப்புவதற்காக இதையெல்லாம் செய்கிறது என பிரியங்கா கூறினார்.