வயநாடு மக்களின் மனம் கவர்ந்த பிரியங்கா Priyanka Speaks Malayalam| Congress Road Show at Wayanad|
கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதி எம்பி பதவியை ராகுல் ராஜினாமா செய்தார். அங்கு வரும் 13ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் சார்பில் ராகுலின் தங்கை பிரியங்கா, பாஜவை சேர்ந்த நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் உட்பட 16 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு நடக்க உள்ள நிலையில், இன்று பிரசாரம் முடிந்தது. தன்னை ஆதரித்தது போலவே தன் தங்கை பிரியங்காவையும் வயநாடு மக்கள் ஆதரிக்க வேண்டும் என ராகுல் பிரசாரம் செய்தார். ரேபரேலியில் வென்றதும், வயநாடு மக்களை ராகுல் கைவிட்டுவிட்டார் என பாஜ பிரசாரம் செய்தது. காங்கிரஸ், பாஜ இருவரும் அரசியல் ஆதாயத்திற்காக வயநாடு மக்களை பயன்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சத்யன் ஓட்டு சேகரித்தார். காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா, ராகுல், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வீதி வீதியாக சென்று ஓட்டு சேகரித்தனர். பெண்கள், சிறு தொழில் முனைவோர், தோட்ட தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரையும் நேரில் சந்தித்த பிரியங்கா, அவர்களிடம் ஓட்டு கேட்டார். கடைசி நாள் பிரசாரத்தில் காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட ரோடு ஷோ நடந்தது. வயநாடு மக்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறேன். இங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா என் இளைய சகோதரி. அவரிடம் எனக்கு அதிக உரிமை உள்ளது. வயநாடு தொகுதியை உலகப் பிரசித்தி பெற்ற சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். இங்கு அவ்வளவு அழகான இடங்கள் உள்ளன. அவர் வெற்றி பெற்றதும் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என ராகுல் பேசினார்.