/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி எதிர்கட்சிகள் போர்க்கொடி | Puducherry | Assembly
அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி எதிர்கட்சிகள் போர்க்கொடி | Puducherry | Assembly
புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளராக இருப்பவர் தீனதயாளன். இவர் அரசு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக காரைக்கால் ஹோட்டலில் வைத்து சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். காரைக்கால் மாவட்ட பொதுப்பணி செயற்பொறியாளர் சிதம்பரநாதன், ஒப்பந்ததாரர் இளமுருகு ஆகியோரும் கைதாகினர் அதிகாரிகள் இருவரின் வீடுகளிலும் ரெய்டு நடந்தது. ஒப்பந்ததாரர் இளமுருகு அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் காமராஜின் உறவினர் என கூறப்படுகிறது. லஞ்ச வழக்கில் அதிகாரிகள் கைதான விவகாரத்தை புதுச்சேரி சட்டசபையில் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எழுப்பினர். கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு இது பற்றி விவாதிக்க கூறினார். சபாநாயகர் அனுமதி தராததால், அமளியில் ஈடுபட்டனர்.
மார் 24, 2025