2 சீட்டுக்குள் அடங்கியது எப்படி? | ADMK | EPS | NRCongress | Puducherry | Puducherry Election
புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., அடங்கிய தேஜ கூட்டணியில் அதிமுக வுக்கு இரண்டு சீட் ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் முன்பே புதுச்சேரியில் ஆட்சியை பிடித்த கட்சி அதிமுக. 1974ல் அக்கட்சியின் ராமசாமி முதல்வராக இருந்தார். பின் 1977லும் அதிமுக ஆட்சி அமைந்தது. எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் செல்வாக்கால், ஓட்டு வங்கி அதிகரித்து, கூட்டணி அரசிலும் அதிமுக அங்கம் வகித்தது. 2011 தேர்தலில் ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2016 தேர்தலில் 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு நான்கு தொகுதிகளில் வென்றது. ஜெயலலிதா மறைந்த பின், 2021 தேர்தலில் தே.ஜ., கூட்டணியில், ஐந்து தொகுதிகள் ஒதுக்கி, ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. இந்த தேர்தலில் இரண்டு சீட் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. #ADMK | #EPS | #NRCongress | #Puducherry | #PuducherryElection | #BJP | #NDA | #NDAAlliance | #SeatSharing | #2026Election | #ElectionUpdate | #TNElection2026 #TamilNaduPolitics #Election2026 #PoliticalDebate #PoliticalStrategy #TamilNaduElections #AlliancePolitics #VoterEngagement #ElectionAnalysis #PoliticalNews #CurrentAffairs #SouthIndianPolitics #NDAvsDMK