தொழிலதிபர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் மூத்த அமைச்சர் | Rahul | Congress | Crisis for Industrialis
நேர்மையாக தொழில் செய்யும் தொழிலதிபர்களுக்கு நெருக்கடி ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பத்திரிகை ஒன்றில் எழுதிய கட்டுரையில், கிழக்கு இந்திய கம்பெனி நாட்டை விட்டு வெளியேறி, 150 ஆண்டுகள் ஆகியும் அது விதைத்த ஏகாதிபத்தியம் என்ற அச்சம் தற்போது புதிய வடிவில் உள்ளதாக கூறியுள்ளார். அனைவருக்கும் தொழில் செய்வதற்கு வாய்ப்பை தரும் முற்போக்கான வணிகத்திற்கு நேரம் வந்துவிட்டது. தொழிலதிபர்களுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம் எனவும் கூறியிருந்தார். இந்த கட்டுரைக்கு பா.ஜ தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியலையே ஒரு குடும்ப பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக மாற்றிய ஒருவர் இன்று கிழக்கிந்திய கம்பெனியைப் பற்றிப் பேசுவது நகைப்புக்குரியது என முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறி இருந்தார். இதற்கு ராகுல் பதிலடி கொடுத்துள்ளார். பத்திரிகையில் எனது கட்டுரை வெளியான பிறகு, நேர்மையாக தொழில் செய்யும் பல தொழிலதிபர்கள் என்னை தொடர்பு கொண்டனர்.