உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தேர்தல் கமிஷனுக்கு ராகுலின் 5 கேள்விகள் | Rahul allegation | RahulonECI | Voter ID Fraud | Congress

தேர்தல் கமிஷனுக்கு ராகுலின் 5 கேள்விகள் | Rahul allegation | RahulonECI | Voter ID Fraud | Congress

மத்தியில் ஆளும் பாஜவின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் கமிஷன், பாஜவுக்கு சாதகமாக அனைத்து தேர்தல்களிலும் முறைகேட்டில் ஈடுபடுவதாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். பெங்களூருவில் ரில் ஓட் அதிகார் ரேலி என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி, பொதுக்கூட்டம் நடந்தது. ஏற்கனவே, மகாராஷ்டிரா, கர்நாடகா தேர்தல்களில் ஓட்டு திருட்டு நடந்ததாக குற்றம் சாட்டிய ராகுல், கடந்த 10 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வாக்காளர்கள் ஓட்டளித்த வீடியோ ஆதாரத்தை வெளியிடும் படி தேர்தல் கமிஷனிடம் வலியுறுத்தி உள்ளார். காங்கிரஸ் சார்பில் பெங்களூருவில் நடந்த பேரணி, பொதுக்கூட்டத்தில் ராகுல் உரையாற்றினர். கடந்த லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இண்டி கூட்டணி பெரும்பாலான இடங்களில் வென்றது. அதற்கு சில மாதங்கள் கழித்து நடந்த சட்டபை தேர்தலில், பாஜ கூட்டணி வென்றது. அது பற்றி ஆராய்ந்தபோது, சட்டசபை தேர்தலுக்கு முன் 1 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். பல இடங்களில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு இருந்தனர். கர்நாடகாவில் நடந்த லோக்சபா தேர்தலிலும் இப்படித் தான் எங்கள் வெற்றி வாய்ப்பு பறிபோனது. 100 சதவீதம் தில்லு முல்லு நடந்துள்ளது என்று ராகுல் குற்றம்சாட்டினார். அத்துடன், தேர்தல் கமிஷனுக்கு 5 கேள்விகளையும் ராகுல் முன்வைத்தார். டிஜிட்டல் வடிவில் வாக்காளர் பட்டியலை தர மறுப்பது ஏன்? தேர்தல் முறைகேடு குறித்த வீடியோ ஆதாரங்களை அழிப்பது ஏன்? வாக்காளர் பட்டியலில் மிகப் பெரிய முறைகேடு செய்வது ஏன்? எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் தராமல் மிரட்டுவது ஏன்? தேர்தல் கமிஷன் பாஜவின் ஏஜென்ட் போல் செயல்படுவது ஏன்? என ராகுல் கேட்டார். ராகுலின் குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் கமிஷன், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி 100 சதவீதம் வெளிப்படை தன்மையுடன் தான் நடப்பதாக கூறியுள்ளது. ராகுலின் புகார் உண்மை என்றால் உறுதி மொழிப் படிவத்தில் கையெழுத்திட்டு, ஆதாரங்களுடன் புகார் அளிக்க வேண்டும்; இல்லையென்றால், அவர் கூறுவது உண்மை அல்ல என்று அர்த்தம். அதற்காக அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

ஆக 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை