உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அந்தஸ்து பெறுவது;அச்சத்தை போக்குவது தான் நோக்கம் Jammu Kashmir| rahul | congress

அந்தஸ்து பெறுவது;அச்சத்தை போக்குவது தான் நோக்கம் Jammu Kashmir| rahul | congress

இந்திய வரலாற்றிலேயே ஜம்மு காஷ்மீரில்தான் இப்படி நடந்து இருக்கு! ஜம்மு காஷ்மீருக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் மற்றும் கூட்டணி பற்றி குறித்த காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் ஸ்ரீநகரில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ராகுல் உரையாற்றினார். சுதந்திரத்திற்கு பிறகு யூனியன் பிரதேசங்கள் மாநிலங்களாக மாற்றப்பட்டு உள்ளன. ஆனால், இந்திய வரலாற்றில் ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது ஜம்மு காஷ்மீரில்தான். இங்குள்ள மக்களின் சோகம், வேதனை, அச்சத்தை போக்குவதே எங்கள் முதல் நோக்கம். ஜம்மு காஷ்மீர் மக்கள் உடனான எனது உறவு, பாசம் ஆழமானது. லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியின் கனவை இண்டியா கூட்டணி அழித்துவிட்டது. வெறுப்பு சந்தையில் அன்பின் கடையை திறக்க வேண்டும் என்பதையே ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சொல்ல விரும்புகிறேன் என ராகுல் பேசினார். பின் பேட்டிகொடுத்த ராகுல், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து பெற்று தர காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி முன்னுரிமை அளிக்கும். தேர்தலுக்கு முன்பே இது நடக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. எனினும், மாநில அந்தஸ்து மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகள் விரைவில் மீட்டெடுக்கப்படும்.

ஆக 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை