உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ராகுல்-ஓமர் சந்திப்பு ரகசியம் உடைந்தது Rahul-Ilhan Omar meet | Rahul america tour | Kashmir Election

ராகுல்-ஓமர் சந்திப்பு ரகசியம் உடைந்தது Rahul-Ilhan Omar meet | Rahul america tour | Kashmir Election

ஓமரை சந்தித்தது இதுக்கு தானா ராகுல் செயலின் திடுக் பின்னணி அமெரிக்காவில் என்ன நடந்தது? காங்கிரஸ் எம்பியும் லோக்சபா எதிர்கட்சி தலைவருமான ராகுல், தனது அமெரிக்க விசிட்டில் அங்குள்ள பெண் எம்பி ஒருவரை சந்தித்தது இந்திய அரசியலில் பூகம்பமாக வெடித்தது. அந்த அமெரிக்க பெண் எம்பி பெயர் இல்ஹான் ஓமர். அவர் இந்தியாவை கடுமையாக எதிர்ப்பவர்; தீவிர பாகிஸ்தான் ஆதரவாளர். காஷ்மீரில் அரசியல் சாசன சட்டம் 370ஐ மோடி அரசு நீக்கிய போது, அமெரிக்க பார்லிமென்டில் இந்தியாவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார் இந்த ஓமர். 2022ல் பாகிஸ்தான் சென்று அப்போதைய பிரதமர் இம்ரான் கானை சந்தித்தார்; பின் பாகிஸ்தான் அபகரித்த காஷ்மீருக்கும் சென்றார். அதை இந்தியா கடுமையாக கண்டித்தது 2023ல் அமெரிக்க பார்லிமென்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்; அதை புறக்கணித்தவர் இந்த ஓமர். இப்படி இந்தியாவிற்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் உள்ள ஒரு அமெரிக்க எம்பியை ராகுல் எதற்கு சந்திக்க வேண்டும்? என கடுமையான விமர்சனங்கள் இந்தியாவில் எழுந்தன. ஆனால் ராகுல்-ஓமர் சந்திப்புக்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.

செப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !