ராகுல் கூறியது தவறு: சுட்டிக் காட்டிய ராஜ்நாத் சிங் | Rahul Speech at Parliament | Om Birla | Modi
பிரதமர் முன் குனிந்தது ஏன்? ராகுல் கேள்விக்கு ஓம் பிர்லா பதில் லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் பேசினார். அக்னிவீர் திட்டத்தின் கீழ் தேர்வான ராணுவ வீரரின் மரணத்தை வீரமரணமாக அரசு கருதுவதில்லை. அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதில்லை. அது ஒரு யூஸ் அண்டு த்ரோ திட்டமாக உள்ளது என ராகுல் கூறினார். உடனே அதற்கு பதில் அளித்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், எதிர்க்கட்சித் தலைவர் இந்த திட்டம் பற்றி தவறான தகவல்களை பேசுகிறார். அக்னிவீர் திட்டத்தில் பணியாற்றும் ஒருவர் வீரமரணம் அடைந்தால், அவரது குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படுவதாக ராஜ்நாத் சிங் கூறினார். தொடர்ந்து பேசிய ராகுல், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடுப்பதில்லை. உரிமைக்காக போராடும் விவசாயிகளை இந்த அரசு தீவிரவாதிகளாக பார்க்கிறது என்றார்.