மோடி பற்றி ராகுல் அவதூறு: தேர்தல் அதிகாரியிடம் பாஜ புகார்  Rahul |should apologize |bjp-petition| 
                                                    
                                                      நவம்பர் 6-ம்தேதி 
பீகார் சட்ட சபைக்கு 
முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. 
தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தர்பாங்கா நகரில் நேற்று பிரசாரம் செய்தார்.
அவர் பேசும்போது, பிரதமர் மோடிக்கு உங்கள் ஓட்டுகள் மட்டும் வேண்டும். 
நடனம் ஆடினால் ஓட்டு போடுவேன் 
என நீங்கள் கூறினால் உடனே அவர் பரதநாட்டியமே ஆடுவார் என ராகுல் கிண்டலடித்தார்.
இந்த பேச்சுக்கு பீகார் முசாபர்பூர் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். 
ராகுல் பேச்சுக்கு பாஜ தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.  
பீகார் மாநில பாஜ சார்பில் 
நிர்வாகி பிந்தியாச்சால் ராய் Bindhyachal rai, பீகார் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது
ராகுலின் பேச்சு தேர்தல் நடத்தை விதிமுறைகளையும் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளையும் மீறுவதாக உள்ளது. 
பிரதமர் பதவிக்கான கண்ணியத்தை குறைப்பதாக இருக்கிறது.
பிரதமர் மீது அவதூறு பரப்பும் 
வகையிலும், தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் வகையிலும் ராகுல் பேசி உள்ளார்.
ராகுலிடம் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
அத்துடன் ராகுல் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க உத்தரவிட வேண்டும். மேற்கொண்டு ராகுல் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என பாஜ அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளது.  
#Rahul#biharElection #modi