இந்துக்கள் பற்றிய பேச்சுக்கு ராகுல் முதல் Reaction | Rahul's Speech at Lok Sabha | Modi vs Rahul
சூழ்ந்து நிற்கும் சர்ச்சை ராகுல் முதல் ரியாக்ஷன் மோடி மீது அட்டாக் எதிர்கட்சி தலைவர் ஆன பிறகு நேற்று முதல் முறையாக ராகுல் லோக்சபாவில் உரையாற்றினார். அவரது பேச்சு பூகம்பத்தை உண்டு பண்ணியது. எல்லா மத கடவுள்களின் படத்தையும் காட்டி பேசிய ராகுல், பாஜ, ஆர்எஸ்எஸ் வன்முறை, வெறுப்புணர்வை பரப்புவதாக சாடினார். நீட் தேர்வு, அக்னிபாத் திட்டம், மணிப்பூர் வன்முறை, சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை என பாஜ அரசை குறிவைத்து தடாலடி விமர்சனங்களை முன் வைத்தார். அவர் யார் உண்மையான இந்துக்கள் என்பது பற்றி பேசிய விஷயம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. ராகுல் பேச துவங்கியதில் இருந்த பாஜ தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், பூபேந்திர சிங் யாதவ் என முக்கிய தலைவர்கள் எழும்பி ராகுலுக்கு பதிலடி கொடுத்தனர். பார்லிமென்ட்டில் பதாகை காட்டி பேச அனுமதி இல்லை. ராகுல் பொய்யான தகவல்களை கூறி சபையை தவறாக வழி நடத்துகிறார் என்று குற்றம் சாட்டினர். இந்துக்கள் பற்றிய பேச்சு மொத்த இந்துக்களையும் அவமதிக்கும் செயல் என்று மோடி சொன்னார். ராகுல் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமித்ஷா வலியுறுத்தினார். இதற்கிடையே ராகுல் பேச்சின் சர்ச்சைக்குரிய பகுதிகளை சபைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கினார். குறிப்பாக, பாஜ சிறுபான்மையினரை நியாயமான முறையில் நடத்தவில்லை என்று ராகுல் சொன்னது;