உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமெரிக்காவில் ராகுல் அப்படி என்ன பேசினார் Rahul US speech | Rahul vs Sikhs | Protest at Rahul house

அமெரிக்காவில் ராகுல் அப்படி என்ன பேசினார் Rahul US speech | Rahul vs Sikhs | Protest at Rahul house

காங்கிரஸ் எம்பியும், எதிர்கட்சி தலைவருமான ராகுல் அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டன் மகாணம் ஹெர்ன்டன் என்ற இடத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நூற்றுக்கணக்கானோர் முன் அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்து விட்டது. இந்தியாவில் சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களுக்கு கிடைக்கும் மத சுதந்திரத்தை கேள்விக்குளாக்கினார் ராகுல். இந்தியாவில் சீக்கியர்கள் டர்பன் அணியவும், கடா அணியவும் அனுமதிக்கப்படுவார்களா என்பது தான் சண்டை. சீக்கியராக அவர் குருத்வாரா செல்ல முடியுமா என்றும் சண்டை. இது சீக்கியர்களுக்கு மட்டும் அல்ல. இந்தியாவில் மற்ற எல்லா மதத்தினருக்கும் இதே நிலை தான் என்று ராகுல் பேசினார். ராகுல் பேச்சுக்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்தது. அமித்ஷாவும் ராகுலை கண்டித்தார். பாஜ ஆதரவு சீக்கிய அமைப்புகளும் கொந்தளித்தன. டில்லியில் உள்ள ராகுல் வீடு முன்பு சீக்கியர்கள் ஒன்று திரண்டனர். ராகுலுக்கு கண்டித்து கோஷம் போட்டனர். அவர்கள் ராகுல் வீட்டை நோக்கி தொடர்ந்து முன்னேறி வர முடியாத படி போலீசார் பேரிக்கார்டுகளை வைத்து தடுப்பு வேலி அமைத்தனர். தடுப்பு வேலியை தகர்க்கும் முயற்சியில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செப் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை