ஆங்கில புலமை, உடல் வலிமை: காங்கிரஸில் புது டெக்னிக் | Rahul | Congress
இளைஞர் காங்கிரஸ் உட்பட இளம் நிர்வாகிகள் அங்கம் வகிக்கும் அணிகளை சேர்ந்த மாநில நிர்வாகிகளை டில்லிக்கு அழைத்து ராகுல் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். சமீபத்தில், தமிழக மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட 15 பேரை அழைத்து, அவர்களுடன் ஒரு நாள் கலந்துரையாடினார். இன்றைய மாணவர்கள், நாளை அரசியல் தலைவர் என்பதில் மாற்றம் இல்லை என எனர்ஜி கொடுக்கும் வகையில் ராகுல் பேசி இருக்கிறார். நீங்கள் அனைவரும் எதிர்காலத்தில், கவுன்சிலர், நகராட்சி தலைவர், எம்.ல்.ஏ, எம்.பி, மாநில அமைச்சர், முதல்வர், மத்திய அமைச்சர், பிரதமர் போன்ற பதவிகளை பெற முடியும். அதற்காக, நீங்கள் லட்சிய உணர்வுடன் மக்கள்நலப் பணி, கட்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மார் 08, 2025