உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / லோக்சபா, ராஜ்யசபா வேலை நேரம் 100 சதவீதத்தை கடந்து சாதனை Rajya Sabha sets New Record| 17 hours debat

லோக்சபா, ராஜ்யசபா வேலை நேரம் 100 சதவீதத்தை கடந்து சாதனை Rajya Sabha sets New Record| 17 hours debat

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31ல் தொடங்கி பிப்ரவரி 13ல் முடிந்தது. 2வது அமர்வு, கடந்த மார்ச் 10ல் தொடங்கி இன்று நிறைவு பெற்றது. பட்ஜெட் கூட்டத் தொடரில் மொத்தம் 26 அமர்வுகள் நடந்துள்ளன. 10 புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. வக்பு வாரிய மசோதா உட்பட 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. லோக்சபாவின் வேலை நேரம் 118 சதவீதமாக இருந்தது. ராஜ்யசபாவின் வேலை நேரம் 119 சதவீதமாக பதிவானது. பட்ஜெட் தொடரின் ஹைலைட் ஆக, வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நீண்ட விவாதத்திற்கு பின் இரண்டு சபைகளிலும் நிறைவேறியது. ராஜ்யசபாவில் வக்பு மசோதா மீதான விவாதம், 3ம் தேதி காலை 11 மணிக்கு துவங்கி அடுத்தநாள் அதிகாலை 4 மணி வரை 17 மணிநேரம் 2 நிமிடங்கள் தொடர்ந்து நடைபெற்றது. இது ராஜ்யசபா வரலாற்றில் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன் 1981ல் 15 மணி நேரம் 51 நிமிடங்கள் விவாதம் நடந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. அனைத்து எம்பிக்களின் ஒத்துழைப்பால் இது சாத்தியமானதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.

ஏப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி