ராஜ்யசபாவில் நடந்த கலகல சம்பவம் Congress MP| Mallikarjun Kharge| Jagdeep Dhankar| Rajya Sabha
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஜூலை 21ல் பிறந்த நாள். இன்று ராஜ்யசபா கூடியதும், இந்த வாரத்தில் பிறந்த நாள் கொண்டாடும் எம்பிக்களின் பெயர், அவர்களின் பின்னணி குறித்து துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் சுருக்கமாக பேசினார். பின், ராஜ்யசபா எம்பிக்கள் சார்பில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. எம்பிக்கள் விவாதத்தின் போது, கார்கேவுக்கான நேரம் வந்ததும் அவரை பேசும்படி ஜெகதீப் தன்கர் அழைத்தார். கார்கே பேச எழுந்ததும், தங்கள் பிறந்த நாளை நான் நினைவுபடுத்தினேன். உங்களுக்கு நாங்கள் வாழ்த்து தெரிவித்தோம் என ஜெகதீப் தன்கர் கூறினார். அதற்கு நன்றி கூறிய கார்கே, என்னைப் பற்றிய விவரங்கள் கூறியபோது மிக சுருக்கமாக பேசினீர்கள் என கார்கே அதிருப்தி தெரிவித்தார்.