உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுகவில் யாருக்கெல்லாம் ராஜ்யசபா எம்பி சீட்?

திமுகவில் யாருக்கெல்லாம் ராஜ்யசபா எம்பி சீட்?

தமிழகத்தை சேர்ந்த 6 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிகிறது. திமுக சார்பில் எம்பிக்களாக உள்ள வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, வைகோ மற்றும் அதிமுக சார்பில் எம்பிக்களாக உள்ள சந்திரசேகரன், அன்புமணி ஆகியோரின் பதவிக்காலம் முடிய உள்ளது. புதிய ராஜ்யசபா எம்பிக்கள் தேர்வு செய்வதற்கான தேர்தல், ஜூன் 19ல் நடைபெற உள்ளது. அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஒரு ராஜ்யசபா எம்பியை தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. திமுக கூட்டணிக்கு 159 எம்எல்ஏக்கள் இருப்பதால் 4 எம்பிக்கள் கிடைப்பர். 75 எம்எல்ஏக்கள் கொண்ட அதிமுகவுக்கு 2 எம்பிக்கள் கிடைப்பர். திமுக சார்பில் வக்கீல் வில்சனுக்கு மீண்டும் சீட் தரப்பட்டுள்ளது. இவர் மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல், தமிழக அரசு கூடுதல் வக்கீலாக பணியாற்றியவர். சண்முகம், முகமது அப்துல்லா எம்பிக்களுக்கு பதிலாக, முன்னாள் எம்எல்ஏ சிவலிங்கம், ரெக்கையா மாலிக் என்ற கவிஞர் சல்மா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு இந்த முறை திமுக சீட் ஒதுக்கவில்லை. அவருக்கு பதிலாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு சீட் கொடுத்துள்ளது. 2021 சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் தோற்ற கமல்ஹாசன், அடுத்து வந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்தார். அப்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, அவருக்கு எம்பி சீட் தரப்பட்டு உள்ளது. வைகோ மகன் துரை கூறும்போது, சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வோம்; பார்லிமென்ட் உள்ளே மட்டுமல்ல எப்போதும் மக்களின் குரலாக வைகோ ஒலிப்பார் என்றார்

மே 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை