தவெகவுடன் அன்புமணி சேருவதை தடுக்க திட்டம்: ராமதாஸ் என்ன செய்வார்? | Ramadoss | Anbumani | ADMK | TVK
நடிகர் விஜய் தனிக்கட்சி துவங்கிய நாள் முதலே தி.மு.க., மற்றும் பா.ஜ.,வை மட்டும் கடுமையாக விமர்சித்து வந்தார். த.வெ.க.வின் அரசியல் எதிரி தி.மு.க., என்றும் கொள்கை எதிரி பா.ஜ., என்றும் அவர் அறிவித்தார். அதிமுகவை தாக்கி எந்த இடத்திலும் அவர் பேசவில்லை. இதனால் திமுகவை வீழ்த்த 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தவெக இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் நடந்த த.வெ.க., செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அது அதிமுகவுடன் இணையாது என்பதை உறுதிபடுத்தியது. வரும் சட்டசபை தேர்தலுக்கு, த.வெ.க தலைமையில் கூட்டணி அமையும்; விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் தவெக தனித்து போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இது குறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, தி.மு.க., ஆட்சியை அகற்ற விரும்பும் யாரும், எங்கள் கூட்டணிக்கு வரலாம் என, விஜய்க்கும் சேர்த்து அழைப்பு விடுத்தார். இந்நிலையில், தனித்து போட்டியிட்டால் பலமான கூட்டணி வேண்டுமே என விஜய் யோசித்து ஒரு முடிவெடுத்துள்ளார்.