உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / புதுச்சேரி கூட்டணி அரசில் தொடரும் பூசல் N. Rangaswamy Puducherry Chief minister | bjp

புதுச்சேரி கூட்டணி அரசில் தொடரும் பூசல் N. Rangaswamy Puducherry Chief minister | bjp

புதுச்சேரியில் என்ஆர்காங்கிரஸ், பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. லோக்சபா தேர்தலில் பாஜ வேட்பாளராக போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வி அடைந்தார். இதனால் கூட்டணிக்குள் குழப்பம் நிலவுகிறது. ரங்கசாமி அமைச்சரவையில் பாஜவுக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சபாநாயகர் பொறுப்பும் பாஜவுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பாஜவுக்கு 9 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 3 பேர் நியமன எம்எல்ஏக்கள். 3 சுயேச்சை எம்எல்ஏக்களும் பாஜவுக்கு ஆதரவளிக்கின்றனர். 2026 ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பாஜவின் எஞ்சிய 6 எம்எல்ஏக்களும் சுயேச்சை எம்எல்ஏக்களும் தங்களுக்கும் அமைச்சர், வாரிய தலைவர் பதவி வேண்டுமென கேட்கின்றனர். இதனால் பாஜ எம்எல்ஏக்களுடன் மாநில தலைவர் செல்வகணபதி டில்லிக்கு சென்றார். பாஜ தலைவர் ஜே.பிநட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினர். பாஜ எம்எல்ஏக்கள் 4 நாளாக டில்லியில் முகாமிட்டுள்ளனர். இந்தச் சூழலில், கூட்டணி தர்மத்தை ரங்கசாமி மீறி விட்டதாகவும், எதிர்கட்சிகளுடன் நெருக்கமாக செயல்படுவதாகவும் பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் குற்றம்சாட்டினார்.

ஜூலை 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி