/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தடுக்க வந்தவர்களுக்கும் வெட்டு தப்பியவர்களை தேடும் போலீஸ் | Ranipet | Crime
தடுக்க வந்தவர்களுக்கும் வெட்டு தப்பியவர்களை தேடும் போலீஸ் | Ranipet | Crime
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சியின் 6வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் பாபு. இவரது தந்தை மணி, பழைய பஸ் நிலையம் அருகே விடுதி மற்றும் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். பைனான்ஸ் ஆபீசில் மணி இருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் 4 பேர், மாமூல் கேட்டு மிரட்டி உள்ளனர். பணம் தர மறுத்த மணி அவர்களிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது, அந்த கும்பல், மறைத்து வைத்து இருந்த அரிவாளால் மணியை வெட்டியுள்ளனர். திமுக கவுன்சிலர் பாபு, அவர்களை தடுக்க முயன்றுள்ளார். அப்போது, அவருக்கும் வெட்டு விழுந்தது.
மே 17, 2025