உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நீட் தேர்வு சர்ச்சை ராகுல் மீது பாஜ தாக்கு | Ravi Shankar Prasad | BJP | Former union law minister

நீட் தேர்வு சர்ச்சை ராகுல் மீது பாஜ தாக்கு | Ravi Shankar Prasad | BJP | Former union law minister

கடந்த மே மாதம் நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. 23 லட்சம் பேர் தேர்வை எழுதினர். நீட் கேள்வித் தாள் கசிவு, அதிகம் பேர் முதல் ரேங்க் எடுத்தது, ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றது என மாணவர்கள் பலசந்தேகங்களை கிளப்பினர். நாட்டின் பல்வேறு ஐகோர்ட்டுகளில் மாணவர்கள், கோச்சிங் சென்டர்கள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு கடந்த 8ம் தேதி முதல் நீட் வழக்குகளை ஒன்றாக்கி விசாரித்தது. சுப்ரீம் கோர்ட் தலையீட்டுக்கு பிறகு மத்திய அரசு வேகமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிபிஐ வழக்கு பதிவு செய்து கேள்வித்தாள் கசிவு தொடர்பாக மருத்துவ மாணவர்கள், பத்திரிகையாளர்கள், ஐஐடி பட்டதாரி, புரோக்கர்கள் உள்பட பலரை கைது செய்துள்ளது.

ஜூலை 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை