உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / போச்சே மனநிலையில் முன்னாள் எம்எல்ஏ! RJD | Rupauli Bye election | Shankar singh | JDU

போச்சே மனநிலையில் முன்னாள் எம்எல்ஏ! RJD | Rupauli Bye election | Shankar singh | JDU

நாட்டின் 7 மாநிலங்களில் 13 சட்டசபை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்லில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் வெளியாகின. இதில் 12 தொகுதிகளில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பாஜ, ஆம் ஆத்மி, திமுக கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையில், பீகாரின் ருபவுலி தொகுதியில் மட்டும் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் - பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதிஷ்குமார் முதல்வராக உள்ளார். ருபவுலி தொகுதி எம்எல்ஏவாக இருந்த பிமா பாரதி, லோக்சபா தேர்தலுக்கு முன் ஜேடியுவில் இருந்து விலகி, ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியில் இணைந்தார். அந்த கட்சியின் சார்பில் பூர்ணியா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால், ருபவுலி சட்டசபை தொகுதியில் இடைத் தேர்தல் நடந்தது. லோக்சபா தேர்தல் தோல்வியை தொடர்ந்து மீண்டும் ருபவுலி சட்டசபை தொகுதியில் ஆர்ஜேடி வேட்பாளராக பிமா பாரதி களம் இறங்கினார். ஆளும் ஜேடியு தரப்பில் கலாதர் பிரசாத் போட்டியிட்டார். இந்நிலையில், வடக்கு பீகார் விடுதலை ராணுவம் என்ற அமைப்பை வழி நடத்தும் சங்கர் சிங் சுயேட்சையாக போட்டியிட்டார். ராஜ்புட் சமூகத்தை சேர்ந்த இவர், 2005ல் லோக்ஜனசக்தி சார்பில் இதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதற்கு அடுத்தடுத்தடுத்த தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை தழுவினார்.

ஜூலை 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ