தமிழர் வடிவமைத்த குறியீடை மாற்றிய அரசு | Rupee Symbol | Indian Rupee | D Uday Kumar | Dmk
ரூபாய் குறியீடை மாற்றிய தமிழக அரசு! உருவாக்கிய உதயகுமார் Reaction என்ன? பட்ஜெட் தொடர்பான முன்னோட்ட வீடியோவில் முதல்வர் ஸ்டாலின், நாடு முழுதும் பயன்படுத்தப்படும் ரூபாய்க்கான குறியீட்டிற்கு பதில் தமிழ் எழுத்தான ரூ என குறிப்பிட்டு உள்ளார். ரூபாய்க்கான குறியீடு தேவநாகிரி முறையில் இருப்பதால் தான் அதனை நீக்கி உள்ளதாக, தமிழக மாநில திட்டக்குழு நிர்வாக துணைத்தலைவர் கூறியுள்ளார். இந்த ரூபாய் குறியீடை உருவாக்கியவர் திமுக முன்னாள் எம்எல்ஏ தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார். 2009ல் இந்திய அளவில் நடத்தப்பட்ட போட்டியில் இவரது வடிவமைப்பே தேர்வானது. இப்போது சர்வதேச அளவில் இந்தியா ரூபாய் குறியீடாகவும், ரூபாய் நோட்டுகளிலும் உதயகுமார் வடிவமைத்த குறியீடே இடம்பெற்றுள்ளது. அவரது குறியீடுக்கு மாற்றாக தமிழக அரசு ரூ என்ற குறியீடை கையில் எடுத்துள்ள நிலையில் சர்ச்சைகளுக்கு உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார். என்னுடைய தந்தை, 1971ல் தமிழகத்தின் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தார். அவர் தற்போது சொந்த கிராமத்தில், தன் வாழ்க்கையை அமைதியாக கழித்து வருகிறார். நான் பிறப்பதற்கு முன்பே அவர் எம்.எல்.ஏ.,வாக இருந்தார். அதனால், தற்போது திமுக அரசு, ரூபாய் சின்னத்துக்கு மாற்றாக ரூ சின்னத்தை பயன்படுத்துவதும், என் தந்தை தி.மு.க.,வில் இருந்ததும் எதேச்சையானது. அதுபோல நான் நம் நாட்டின் ரூபாய்க்கான சின்னத்தை நான் வடிவமைத்ததும் எதேச்சையாக அமைந்தது. தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.,வின் மகன் என்பதற்காக அந்த சின்னம் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தமிழக அரசின் தற்போதைய முடிவு குறித்து, எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை. எந்த சிக்கலிலும் மாட்டுவதற்கு தயாராக இல்லை. ஒருவேளை சின்னத்தில் மாற்றம் வேண்டும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். இது முழுக்க முழுக்க அரசின் முடிவு. அதில் எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என உதயகுமார் கூறினார்.