ரஷ்யா தாண்டவம்... உக்ரைன் பார்க்காத பகீர் காட்சி | russia drone attack video | ukraine train attack
ரஷ்யாவில் இருந்து ஏவப்பட்ட எமன் வெடித்து சிதறியது உக்ரைன் ரயில் 30 பேர் பலி; பலர் போராட்டம் பதற வைக்கும் காட்சிகள் உக்ரைன், ரஷ்யா இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர போர் நடக்கிறது. இரு நாடுகளும் மாறி, மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. ஒரு பக்கம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போரை நிறுத்த தீவிர பேச்சு வார்த்தை நடத்தி வந்தாலும், சண்டை முடிவதாக தெரியவில்லை. இந்த நிலையில் தான் உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதலை ரஷ்யா நடத்தி இருக்கிறது. 35 ஏவுகணைகளை வீசி உக்ரைனில் உள்ள காஸ் கட்டமைப்புகளை தகர்த்தது. இன்னொரு பக்கம் உக்ரைனின் சுமி ஏரியாவில் உள்ள ஷோஸ்ட்கா ரயில் நிலையத்தை குறிவைத்து ரஷ்ய ராணுவம் ட்ரோன்களை ஏவியது. இந்த ட்ரோன்கள் கீவ் நகருக்கு சென்று கொண்டிருந்த பாசஞ்சர் ரயில் மீது மோதி வெடித்தது. ரயிலின் ஒரு பகுதி தீப்பற்றி சிதறியது. சம்பவ இடத்திலேயே 30 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த காயம் அடைந்தனர். ரஷ்யாவின் இந்த செயலை காட்டுமிராண்டித்தனம் என விமர்சித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ‛அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்தும் தாக்குதல் நடத்துவது பயங்கரவாதத்தின் உச்சம். உலக நாடுகள் இதை சும்மாவிடக்கூடாது என்று கூறினார்.