உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 6வது முறையாக புடின் - டிரம்ப் இடையே நடந்த பேச்சுவார்த்தை Russia vs Ukraine war | Trump | Putin

6வது முறையாக புடின் - டிரம்ப் இடையே நடந்த பேச்சுவார்த்தை Russia vs Ukraine war | Trump | Putin

குறிக்கோளை அடையும் வரை பின்வாங்க போவதில்லை டிரம்ப்பிடம் புடின் திட்டவட்டம் உக்ரைன் - ரஷ்யா இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. அதிபராக வந்தால் உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என டொனால்டு டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் கூறி இருந்தார். சொன்னபடியே அதிபரான பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அழைத்து பேசினார். அதே போல ரஷ்ய அதிபர் புடினுடனும் பேச்சு நடத்தினார். இது தவிர புடினுடன் தொடர்ந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் டிரம்ப் டெலிபோனிலும் பேசி போரை நிறுத்த வலியுத்தி வருகிறார். நேற்று 6வது முறையாக ரஷ்ய அதிபர் புடினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சுமார் ஒரு மணி நேரம் தொலைபேசியில் பேசினார். ஆனால் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் மாளிகை உதவியாளர் யூரி உஷாகோவ், இரு நாட்டு தலைவர்கள் உரையாடலின் முக்கியத்துவம் குறித்து கூறியதாவது, தொலைபேசி உரையாடலில் உக்ரைன் போர் விஷயம் மட்டுமின்றி, ஈரான், மத்திய கிழக்கு பகுதிகள் மற்றும் அமெரிக்கா உடனான ரஷ்யாவின் உறவுகள் குறித்தும் அதிபர் புடின், டிரம்பிடம் பேசினார். உக்ரைன் உடனான மோதலுக்கு வித்திட்ட அடிப்படை காரணங்களை நீக்கும் வரை ரஷ்யா போரில் இருந்து பின்வாங்காது என புடின் திட்டவட்டமாக தெரிவித்தார். உக்ரைனுடன் பேச்சுவார்த்தையை தொடர தயாராக இருக்கிறோம். ஆனால், ரஷ்யாவின் ராணுவ இலக்குகளில் எவ்வித சமரசமும் செய்ய மாட்டோம் என்று புடின் சொன்னார். கடந்த மாதம் ரஷ்யா-உக்ரைன் இடையே போர் கைதிகள் பரிமாற்றம் செய்வது தொடர்பான ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் முன்னேற்றங்கள் குறித்தும் புடின் பேசியதாக ரஷ்ய அதிபர் மாளிகை உதவியாளர் யூரி உஷாகோவ் கூறினார். டிரம்ப் அதிபராக பதவி ஏற்றது முதல் புடினுடன் இதுவரை 6 முறை தொலைபேசியில் பேசி இருக்கிறார். இருப்பினும் புடினின் நிலைப்பாட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் தான் மகிழ்ச்சி அடையவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜூலை 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி